/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொடர் மழையால் நோய் தொற்று கால்நடைகளுக்கு சிகிச்சை
/
தொடர் மழையால் நோய் தொற்று கால்நடைகளுக்கு சிகிச்சை
ADDED : நவ 05, 2024 01:18 AM
தொடர் மழையால் நோய் தொற்று
கால்நடைகளுக்கு சிகிச்சை
தர்மபுரி, நவ. 5-
தொடர் மழையால், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இலக்கியம்பட்டி கால்நடை பெரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், கால்நடைகளுக்கு நோய் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இலக்கியம்பட்டி கால்நடை பெரு மருத்துவமனையில், கால்நடை மருத்துவர் சரவணன் மற்றும் மருத்துவ மாணவர்கள், உதவியாளர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து, கால்நடை மருத்துவர் சரவணன் கூறுகையில், ''மழைகாலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதில், ஆடு, மாடு ஆகியவற்றிற்கு காய்ச்சல், கழிச்சல், சேற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள், நாய்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதை கால்நடை வளர்ப்போர் சரியாக பயன்படுத்தி, கால்நடை இறப்பை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 82 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனை, ஒரு கால்நடை பெரு மருத்துவமனை, 2 நடமாடும் மருத்துவமனை ஆகியவற்றிலும் இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.