/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விரிவாக்க பணிக்கு வெட்டப்படும் மரங்கள்
/
சாலை விரிவாக்க பணிக்கு வெட்டப்படும் மரங்கள்
ADDED : நவ 13, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி - பாலக்கோடு நெடுஞ்சாலையில், தர்மபுரி அடுத்த, பழைய தர்மபுரியில் இருந்து, முத்துகவுண்டன் கொட்டாய் ரயில்வே பாலம் வரை, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக, குறிப்பிட்ட, 3 கி.மீ., சாலையின் இரு புறங்களிலும் உள்ள, புளிய மரங்கள் உட்பட, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான, மரங்கள் கணக்கெடுக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த ஆக., மாதம் நடந்தது.
இதில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள், மரங்கள் கணக்கெடுப்பு மற்றும் சாலை அளவீடு செய்தனர். தொடர்ந்து, சாலையோரத்தில் இருந்த, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, புளிய மரங்கள் நேற்று முதல் வெட்டப்பட்டு வருகிறது.

