/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொகுப்பு வீட்டிற்கு பில் தொகை கேட்டு 4 ஆண்டாக அலையும் பழங்குடி பெண்
/
தொகுப்பு வீட்டிற்கு பில் தொகை கேட்டு 4 ஆண்டாக அலையும் பழங்குடி பெண்
தொகுப்பு வீட்டிற்கு பில் தொகை கேட்டு 4 ஆண்டாக அலையும் பழங்குடி பெண்
தொகுப்பு வீட்டிற்கு பில் தொகை கேட்டு 4 ஆண்டாக அலையும் பழங்குடி பெண்
ADDED : ஆக 07, 2025 01:06 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியிலுள்ள மொத்தம், 62 கிராமங்களில், 20,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 2019-20ம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், 1.70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடுகள் கட்ட, 140 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. அதிகாரிகள் மலை பகுதிகளுக்கு சென்று பணியை பார்வையிடாமல் உள்ளதால், சிலர் வீடுகளை கட்டி முடிக்காமல் உள்ளனர். கட்டிய வீடுகளுக்கு, பில் தொகையை தராமல், அதிகாரிகள் தினமும் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, சேலுார் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கவிதா, 39, கூறியதாவது: கடந்த, 2019 - 20ல் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது. பின், 2021 முதல், அடித்தளம், கட்டடம் கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு பில் தொகை கேட்டு, ஒவ்வொன்றுக்கும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்க்கு, நடையாய் நடந்த என் கணவர், காட்டெருமை தாக்கி கடந்த, 2023ல் இறந்தார். கட்டடம் கட்டியதற்கு பில் தொகையை கேட்டு, 4 ஆண்டாக அலைகிறேன். எங்கள் கிராமத்திலிருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்து செல்ல, 160 கி.மீ., ஆகிறது. பலமுறை வந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பலர் பில் தொகையை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.