/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி
/
இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி
ADDED : செப் 18, 2025 01:26 AM
தர்மபுரி, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி, 1987ல் நடந்த போராட்டத்தில் பங்கேற்று, உயிரிழந்த, 21 தியாகிகளின், 38ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க அலுவலகத்தில் தர்மபுரி, பா.ம.க., -- எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் தலைமையில் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதில், முன்னாள், பா.ம.க., - எம்.பி., செந்தில், பா.ம.க., மாநில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநில உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
* பொம்மிடி அடுத்த நத்தமேட்டில், பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில், தர்மபுரி, பா.ம.க., - ---எம்.எல்.ஏ.,வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.,--வேலுசாமி உயிரிழந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.