ADDED : மே 04, 2025 01:16 AM
தர்மபுரி:அனைத்து இந்திய திரிணாமுல் காங்., கட்சியின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் பிலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இறந்தவர்களுக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர். தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, மனுக்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
