/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி ஒன்றிய திட்டப்பணிகளுக்கு திறக்கப்படாத டெண்டரால் தவிப்பு
/
தர்மபுரி ஒன்றிய திட்டப்பணிகளுக்கு திறக்கப்படாத டெண்டரால் தவிப்பு
தர்மபுரி ஒன்றிய திட்டப்பணிகளுக்கு திறக்கப்படாத டெண்டரால் தவிப்பு
தர்மபுரி ஒன்றிய திட்டப்பணிகளுக்கு திறக்கப்படாத டெண்டரால் தவிப்பு
ADDED : ஆக 29, 2024 07:37 AM
தர்மபுரி: தர்மபுரி ஒன்றியத்தில், 28 கிராம பஞ்.,க்கள் உள்ளது. இதில், பெரும்பாலான பஞ்.,களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடம் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி ஒப்புதல் பெற்ற இடங்களில், மக்கள் தொகைக்கு ஏற்றார் போல், மேல்நிலை நீர் தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், தர்மபுரி ஒன்றியத்தில், நபார்டு திட்டத்தின் மூலம், 7.90 கோடி ரூபாய் மதிப்பில், 34 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர் என, 50க்கும் மேற்பட்டோர் கடந்த ஜூலை மாதம், 28 அன்று ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.ஓரிரு நாட்களில் டெண்டர் இறுதி செய்து, பணிகள் வழங்கப்படும் என, ஒப்பந்ததாரர்கள் காத்திருந்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் நேற்று வரை, டெண்டர் திறக்கப்படவில்லை.
இது குறித்து, ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், 'ஒரு சிலர் பல இடங்களில் விண்ணப்பித்து இருந்தனர். இதில், பழைய ஒப்பந்ததாரர்கள், 10 சதவீதம் வரை ஒப்பந்த புள்ளியை குறைத்து டெண்டர் போட்டனர். ஆனால், அ.தி.மு.க., ஆதரவு ஒப்பந்ததாரர்கள், 1 முதல், 3 சதவீதம் மட்டும் குறைத்து டெண்டர் கோரியுள்ளனர். இதனால் அவர்களுக்கு பணிகள் கிடைக்காது என்ற நிலையில், டெண்டரை நிறுத்தி வைக்க, அழுத்தம் தரப்பட்டுள்ளது. டெண்டர் தொகையை குறைத்து, அரசுக்கு லாபம் ஏற்படுத்தி தரக்கூடிய ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இது குறித்து, தர்மபுரி பி.டி.ஓ., சத்தியாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: தர்மபுரி ஒன்றியத்தில், புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட ஆன்லைன் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் திறக்க, 90 நாட்கள் வரை கால அவகாசம் உள்ளது. இந்நிலையில், ஒரே நபர் பல இடங்களுக்கு டெண்டர் கோரியுள்ளார். மேலும், ஒப்பந்த புள்ளியில் அதிகளவில் வித்தியாசம் உள்ளதால், இறுதி செய்ய காலதாமதமானது. இன்று, டெண்டர் இறுதி செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.