/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரியிலிருந்து தவறி விழுந்த துாத்துக்குடி டிரைவர் சாவு
/
லாரியிலிருந்து தவறி விழுந்த துாத்துக்குடி டிரைவர் சாவு
லாரியிலிருந்து தவறி விழுந்த துாத்துக்குடி டிரைவர் சாவு
லாரியிலிருந்து தவறி விழுந்த துாத்துக்குடி டிரைவர் சாவு
ADDED : ஜூலை 24, 2025 01:21 AM
தர்மபுரி, துாத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அடுத்த நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 41. சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வந்தார். கடந்த, 21ல் மாலை, 3:00 மணிக்கு மனைவி சித்ராவிற்கு போன் செய்து, ஐதராபாத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சோயா தவிடு லோடு ஏற்றி வருவதாகவும், வழிமாறி வருவதால் காலதாமதம் ஆகிறது.
தனக்கு ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால், தர்மபுரியை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் மூலமாக, மாற்று டிரைவராக பொம்மிடியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் லாரி ஓட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்றிரவு, 11:30 மணிக்கு வெற்றிச்செல்வம், சித்ராவிற்கு போன் செய்து, சேலம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தொம்பரக்காம்பட்டி அருகே, லாரியிலிருந்து ராஜேந்திரன் தவறி விழுந்து விட்டதாகவும், படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரன் உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்
கின்றனர்.