ADDED : மார் 29, 2026 02:43 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி :சிங்காரப்பேட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 36, பெட்ரோல் பங்க் ஊழியர். கடந்த, 23 இரவு, சிங்காரப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார்.
அப்போது அங்கு மது போதையில் நின்ற, அதே பகுதியை சேர்ந்த சுபாஷ், 27, அறிவானந்தன், 24, ஆகியோர், கார்த்திக்கிடம் தகராறு செய்து, உருட்டு கட்டையால் தாக்கினர். இது குறித்து கார்த்திக் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார், அவரை தாக்கிய இருவரை தேடி வருகின்றனர்.
