ADDED : பிப் 27, 2024 03:26 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளியில், பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் மது விலக்கு சம்பந்தமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சாக்குபையுடன் வந்த அப்பகுதியை சேர்ந்த ஜானகி, 50, என்பவரை சோதனை செய்ததில், மது பாட்டில்கள் இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று கடத்துார் எஸ்.ஐ., புவனேஸ்வரி மற்றும் போலீசார், கடத்துார் - அரூர் மெயின் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மொபட்டில், டாஸ்மாக் கடையில் மது வாங்கி கூடுதல் விலைக்கு விற்க கொண்டு சென்ற கொட்டாவூரை சேர்ந்த சரவணன், 41, என்பவரை கைது செய்தனர்.
