/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.1.97 லட்சம் மதிப்பு குட்கா காரில் கடத்திய இருவர் கைது
/
ரூ.1.97 லட்சம் மதிப்பு குட்கா காரில் கடத்திய இருவர் கைது
ரூ.1.97 லட்சம் மதிப்பு குட்கா காரில் கடத்திய இருவர் கைது
ரூ.1.97 லட்சம் மதிப்பு குட்கா காரில் கடத்திய இருவர் கைது
ADDED : ஏப் 30, 2025 01:29 AM
மாரண்டஹள்ளி:
மாரண்டஹள்ளி அருகே, காரில் கடத்திய புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சீனிவாசன் எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் உட்பட போலீசார், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு மாரண்டஹள்ளி வெள்ளிசந்தை சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளிசந்தை நோக்கி வந்த மாருதி பிரிஷா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 1.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 156 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவரை பிடித்து விசாரித்ததில், கிருஷ்ணகிரி அடுத்த ஐகொந்தம் கிராமத்தை சேர்ந்த சிராஜ், 25, அவருடன் வந்தவர், கர்நாடகா மாநிலம், சிக்ககொல்லரஅட்டி கிராமத்தை சேர்ந்த திலக்குமார், 24, என தெரிந்தது. தொடர்ந்து, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.