ADDED : நவ 12, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பெங்களுரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மஹிந்தரா எக்ஸ்.யூ.வி., காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 75,600 ரூபாய் மதிப்புள்ள, 63 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, காரில் வந்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பெருமாள், 32, ஸ்ரீகாந்த், 34 ஆகிய இருவரை கைது செய்தனர்.

