தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கோழி திருடிய இருவர் கைது

கோழி திருடிய இருவர் கைது

கோழி திருடிய இருவர் கைது


ADDED : மே 26, 2026 08:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்-பட்டி, குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 44. மின்வாரிய ஊழியர். இவர் குமரக்கோட்டத்தில் உள்ள தன் தோட்டத்தில் தீவனப்பயிர் மற்றும் கோழிகள் வளர்த்து வரு-கிறார். கடந்த, 17ல் தோட்டத்தில் இருந்த, 15 கோழிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதே போன்று நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் தோட்டத்திற்கு கார்த்திகேயன் சென்றார். அப்போது கூண்டில் அடைக்கப்பட்ட, 4 கோழிகளை காணவில்லை. தேடியபோது தீவன பயிருக்குள் பட்டுகோணாம்பட்டியை சேர்ந்த அபிஷேக், 21, மற்றும் சேலம் மாவட்டம் வாழப்-பாடியை சேர்ந்த, 14 வயது சிறுவன், கோழிக-ளுடன் இருந்துள்ளனர். இதையடுத்து கார்த்தி-கேயன் கொடுத்த புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அபிஷேக் மற்றும் 14 வயது சிறு-வனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us