ADDED : ஏப் 03, 2026 04:08 AM
ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., பூர்ணிமா மற்றும் போலீசார், ரோந்து சென்றபோது, தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை சுற்றுச்சுவரில், பா.ஜ., கட்சியின் தாமரை சின்னம் வரையப்பட்டிருந்தது. யார் வரைந்தார் என தெரியாத நிலையில், தேர்தல் விதிமுறை மீறியதாக, அடையாளம் தெரியாத நபர் என, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, கோட்டை தெரு பகுதியிலும், எஸ்.ஐ., கார்திகேயன் மற்றும் போலீசார், சந்தை தெருவிலும் தனித்தனியாக ரோந்து சென்றனர். அப்போது, கோட்டை தெருவை சேர்ந்த கணபதி, 28, என்பவரது வீட்டின் சுவரில், தேர்தல் விதிமுறையை மீறி, அ.தி.மு.க., சின்னமும், சென்னகிருஷ்ணன், 63, என்பவரது வீட்டின் சுவரில், தி.மு.க., சின்னமும் வரையப்பட்டிருந்தது.
அதனால் இருவர் மீதும், தனித்தனியாக வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
