தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது


ADDED : ஜூலை 23, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பருவதனஹள்ளியை சேர்ந்தவர் குழந்தைவேல், 25. இவர் கடந்த, ஜூன், 19ல் அப்ப-குதியில் பைக்கில் வேகமாக சென்றார். இதை சாலையில் நடந்து சென்ற லட்சுமி, 50, என்பவர் கண்டித்தார். இதில் ஆத்திர-மடைந்த குழந்தைவேல், லட்சுமியின் வீட்டிற்கு சென்று, அவரை அரிவாளால் வெட்டி கொன்றார். பென்னாகரம் போலீசார் குழந்-தைவேலை கைது செய்து, தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்-தனர்.

அரூரை சேர்ந்த தொழிலாளி ரவி, 45. இவர், அருகிலுள்ள கிரா-மத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை கடந்த, 2025 நவ.,ல் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் ரவியை கைது செய்-தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., அருண் கபிலன் பரிந்துரைப்-படி, குழந்தைவேல், ரவி ஆகியோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இதைய-டுத்து இருவரையும் நேற்று, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us