/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டூ - வீலர் மீது வேன் மோதி சகோதரர்கள் இருவர் பலி
/
டூ - வீலர் மீது வேன் மோதி சகோதரர்கள் இருவர் பலி
ADDED : ஏப் 11, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தில் வசிப்பவர் பத்ரி. இவரது மகன்கள் பிரீத்தம், 19, பவன், 17. இருவரும் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றினர்.
நேற்று காலை இருவரும், 'ஹீரோ டுயட்' ஸ்கூட்டரில் தளியிலிருந்து பேளகொண்டப்பள்ளிக்கு சென்றுள்ளனர்.
பிரீத்தம் ஸ்கூட்டரை ஓட்டினார். மதகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி அருகே முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்த முயன்றுள்ளனர்.
அப்போது எதிரே வந்த தனியார் நிறுவன வேன், ஸ்கூட்டர் மீது மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

