/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டூவீலர் - தனியார் பஸ் நேருக்குநேர் மோதல் விபத்தில் கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி

ADDED : டிச 07, 2024 07:36 AM
எலச்சிபாளையம்: சேந்தமங்கலம் அருகே, நல்லாம்பாளையத்தில் டூவீலரும், தனியார் பஸ்சும் நேருக்குநேர் மோதிய விபத்தில், கல்லுாரி மாண-வர்கள் இருவர் பரிதாபமாக பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே, மலைவேப்பங்-குட்டையை சேர்ந்த லோகநாதன் மகன் பூந்தமிழன், 20; இவர், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் ஐ.டி., முத-லாமாண்டு படித்து வந்தார்.
இவரது நண்பர், ராசிபுரம் அருகே, புதுப்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராகுல், 20; ராசிபுரம் அரசு
கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் முதலாமாண்டு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, 'யமஹா எம்.டி.,' டூவீலரில் கல்-லுாரிக்கு புறப்பட்ட ராகுல், நண்பர் பூந்தமிழனை
திருச்செங்-கோடு கல்லுாரியில் இறக்கிவிட, அவரையும் அமர வைத்து அழைத்து சென்றார். காலை, 9:15 மணியளவில்,
எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம்
நோக்கி எதிரே வந்த, 'எஸ்.வி.எஸ்.,' என்ற தனியார் பஸ், டூவீலர் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில், ராகுல், பூந்தமிழன் இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்-பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடைப்பாடியை
சேர்ந்த பஸ் டிரைவர் ராஜமாணிக்கம், 37, என்பவரை, எலச்சிபா-ளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.