/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முயல் கறி விற்ற இருவருக்கு ரூ.80,000 அபராதம் விதிப்பு
/
முயல் கறி விற்ற இருவருக்கு ரூ.80,000 அபராதம் விதிப்பு
முயல் கறி விற்ற இருவருக்கு ரூ.80,000 அபராதம் விதிப்பு
முயல் கறி விற்ற இருவருக்கு ரூ.80,000 அபராதம் விதிப்பு
ADDED : நவ 10, 2025 02:14 AM
பாலக்கோடு: காரிமங்கலத்தில், பாலக்கோடு வனஅலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காட்டு முயல்களை வேட்டையாடி கறியை விற்பனைக்காக பாலித்தீன் பைகளில் அடைத்து வந்து, காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை அருகே விற்ற இருவரை, பிடித்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பத்துார் மாவட்டம் பாய்ச்சல் பகுதியை சேர்ந்த அர்ஜூன், 28, மற்றும் சந்தோஷ், 30 என்பதும், இவர்கள் திருப்பத்துார் வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து, 10 கிலோ முயல் இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவருக்கும் தலா, 40,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.