தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 'குண்டாஸ்'

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 'குண்டாஸ்'

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 'குண்டாஸ்'


ADDED : நவ 24, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; புத்தகக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற வழக்கில் கைதான இருவரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ், 36, புத்தகக்கடை வைத்துள்ளார். இவரது நண்பரான ரமேஷ்குமார் என்பவருடன் கடந்த அக்., 20ல், டோல்கேட் அருகே உள்ள தனியார் பாரில் மது அருந்தினார். அப்போது, பக்கத்து மேஜையில் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்த நித்தீஷ் உள்பட நான்கு பேர் அமர்ந்து மது குடித்துள்ளனர். அவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகேஷ் கழுத்தின் பின்புறம் குத்தி உள்ளார். படுகாயமடைந்த முகேஷ், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே உள்ள காமலாபுரம் பன்னீர்செல்வம், 27, இடைப்பாடி அடுத்த வீரப்பன்பாளையத்தை சேர்ந்த கவீன், 25, உள்பட, 5 பேரை கைது செய்தனர். இதில், பன்னீர்செல்வம், கவீன் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அனிதா பரிந்துரை படி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகல், சேலம் சிறையிலுள்ள, அவர்கள் இருவரிடமும் போலீசார் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us