/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாலிபர் கொலையில் இருவருக்கு ஆயுள்
/
வாலிபர் கொலையில் இருவருக்கு ஆயுள்
ADDED : ஏப் 10, 2025 01:15 AM
வாலிபர் கொலையில் இருவருக்கு ஆயுள்
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, முன்விரோத தகராறில் வாலிபரை கொன்ற, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், கவுதமபேட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சிவக்குமார், 45. இவருக்கும், திருப்பத்துார் போஸ்கோ நகரை சேர்ந்த பரிமளா என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பரிமளாவை சிவக்குமார் பிளேடால் கிழித்து அடித்து உதைத்தார். இதை, பரிமளாவின் அக்காள் மகன் நாராயணன், 28, கடந்த, 2016ம் ஆண்டு தட்டி கேட்டதில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், ராஜேஷ், 40, பசுபதி, 35, ஆகியோர், 2016, செப்., 17ல் திருப்பத்துார் அடுத்த ஏரிக்கோடியூரில் நாராயணனை, கத்தியால் குத்தி கொன்றனர். திருப்பத்துார் டவுன் போலீசார் மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் சிவக்குமார் உடல் நலக்குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கு, திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, கொலையில் தொடர்புடைய ராஜேஷ், பசுபதி ஆகியோருக்கு நேற்று முன்தினம் மாலை, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.