தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்


ADDED : மார் 11, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:அரூர் அருகே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பிட்' அடித்த, தனியார் பள்ளி மாணவர்கள் இருவரை, சிறப்பு பறக்கும் படையினர் நேற்று முன்தினம் பிடித்தனர்.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று முன்தினம், வேதி-யியல் தேர்வு நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள சில தேர்வு மையங்களில் தனியார் பள்ளிகள் இயக்குனர் சுகன்யா, தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர்

சாந்தகுமார் ஆகியோர் தலைமையிலான சிறப்பு பறக்கும் படை-யினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அரூர் பகுதியிலுள்ள, 2 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, 2 மாணவர்கள், 'பிட்' வைத்து தேர்வு எழுதியது தெரிந்தது. இதை-யடுத்து, அவர்களிடமிருந்த விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்-பட்டன. இந்த முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us