ADDED : ஆக 28, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்:தர்மபுரி
மாவட்டம், காரிமங்கலம் அடுத்த காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர்
சபரிநாதன், 22. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 25ம் தேதி காலை, 7:00 மணிக்கு, பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள
தனியார் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியிருந்த அவரது மொபட்டை
காணவில்லை.
காரிமங்கலம் அடுத்த ஏரியின் கீழுரை சேர்ந்தவர்
விஜயகுமார், 37, டிரைவர்; இவர், கடந்த, 25ம் தேதி மாலை, 4:30 மணிக்கு
காரிமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஹீரோ
ஸ்பிளண்டர் பைக் மாயமானது. இருசம்பவங்கள் குறித்தும், காரிமங்கலம்
போலீசார் விசாரித்து, ஓசூர் பேடரபள்ளியை சேர்ந்த சுரேஷ், 36,
என்பவரை கைது செய்தனர்.
