ADDED : டிச 09, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா, தர்மபுரி உழவர் சந்தை அருகில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் ஏற்பாட்டில், 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் மற்றும் பெண்களுக்கு வேட்டி, சேலை மற்றும் போர்வைகள், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி நேற்று வழங்கினார்.
இதில், மாநில சட்ட திருத்த குழு துணை செயலாளர் தாமரைசெல்வன், நகர செயலாளர் நாட்டான்மாது, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.