/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : டிச 29, 2024 12:51 AM
தர்மபுரி, டிச. 29-
தர்மபுரி, நான்குரோடு உழவர்சந்தை அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தர்மபுரி நான்கு ரோடு அருகே உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இதன் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு காலை மற்றும் மாலை நேரத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களை சேர்ந்த விவசாயிகள் சென்று வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வது குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மக்களின் நலன் கருதி, சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.