தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம்

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம்

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம்


ADDED : மார் 27, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த, 2016 - 17ல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.

சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், அதிலிருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், நவீன உடற்பயிற்சி சாதனங்களும் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாததால் வீணாகி விட்டது.

இதனால், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை, முறையாக பராமரிக்க, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us