/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சீரமைக்காத பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடம்
/
சீரமைக்காத பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடம்
ADDED : மே 03, 2024 07:35 AM
அரூர்: அரூர் அருகே, தரமற்ற முறையில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட ஒடசல்பட்டி தலதரணிமேட்டில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், கடந்த, 2019 - 20ல், 18.14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டு கடந்தாண்டு, செப்., 24ல் நிறைவடைந்துள்ளது. கடந்த, 7 மாதங்களாக கட்டடம் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் உரிய மதிப்பீடுக்கு மாறாக, தரமற்று, உறுதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இதனால், கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. கட்டடம் கட்டும் பணியின் போது, இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், இது குறித்து கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தை ஆய்வு செய்து, முறையாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.