/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுகாதாரமற்ற தாய்மார்கள் பாலுாட்டும் அறை
/
சுகாதாரமற்ற தாய்மார்கள் பாலுாட்டும் அறை
ADDED : ஜூன் 05, 2024 05:44 AM
தர்மபுரி : தர்மபுரி, டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறையை, சுத்தமாக பராமரிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி நிர்வாகம் சார்பில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை கடந்த, 2015ல் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இதை, தாய்மார்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இதை, நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பது இல்லை. அருகிலுள்ள பயணிகள் தங்கும் அறையில், குடிமகன்கள் மது அருந்துவது, அங்கேயே படுத்து உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருகே, தாய்மார்கள் பாலுாட்டும் அறையை பயன்படுத்தும் தாய்மார்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், பராமரிப்பின்றி சுகாதாரமற்ற முறையிலுள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறையை துாய்மைப்படுத்த, நகராட்சி நிர்வாகத்துக்கு தாய்மார்கள் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தாய்மார்களின் நலன் கருதி, சுகாதாரமில்லாத தாய்மார்கள் பாலுாட்டும் அறையை முறையாக பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.