/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனச்சரகர், வனவர் பதக்கம் வென்று சாதனை
/
வனச்சரகர், வனவர் பதக்கம் வென்று சாதனை
ADDED : அக் 27, 2024 01:26 AM
கிருஷ்ணகிரி, அக். 27-
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த, 27வது அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டியில் கிருஷ்ணகிரி வனச்சரகர், வனவர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், 27வது அகில இந்திய வனத்துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், தர்மபுரி வனமண்டலம், கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம் கோட்டத்திலிருந்து வனச்சரகர் மகேந்திரன், வனவர் மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். இதில், வனச்சரகர் மகேந்திரன், பளு துாக்குதல் போட்டியில், 2 வெள்ளி பதக்கம் பெற்றார். வனவர் மகேஸ்வரி, வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கங்களை பெற்ற வனச்சரகர் மற்றும் வனவரை, கோட்ட வன அலுவலர் தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டி, வாழ்த்தினார்.