/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாராஹி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
வாராஹி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : நவ 09, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அருகே, புதியதாக கட்டப்பட்ட வாராஹி அம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது.
தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அழகாபுரியில், புதியதாக வாராஹி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபி ேஷக விழாவையொட்டி நேற்று முன்தினம், இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு மேல் திருப்பணி எழுச்சி, இரண்டாம்கால யாக பூஜை மற்றும் நாடிசந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 8:00 மணிக்கு மேல், வாராஹி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது.