sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலாலயம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் துவங்கப்படாத வர்ணீஸ்வரர் கோவில் திருப்பணி

/

பாலாலயம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் துவங்கப்படாத வர்ணீஸ்வரர் கோவில் திருப்பணி

பாலாலயம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் துவங்கப்படாத வர்ணீஸ்வரர் கோவில் திருப்பணி

பாலாலயம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் துவங்கப்படாத வர்ணீஸ்வரர் கோவில் திருப்பணி


ADDED : செப் 23, 2024 03:53 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் வர்ணீஸ்வரர் கோவில் பாலாலயம் முடிந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், இக்கோவில் திருப்பணிகளை விரைந்து துவங்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மிகவும் பழமையான வர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. போரில், ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமன், அயோத்-திக்கு செல்லும் வழியில், இக்கோவில் அருகிலுள்ள வர்ண-தீர்த்தம் என்ற குளத்தில் நீராடி விட்டு, தீர்த்தமலைக்கு சென்ற-தாக வரலாறு கூறுகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்-தர்கள் வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த-மான இக்கோவில், முறையாக பராமரிக்கப்படாததால், கூரைகள் மற்றும் பக்கவாட்டில் விரிசல்கள் ஏற்பட்டு மிகவும், சேதம-டைந்த நிலையில் உள்ளது. மேலும், கோவில் அருகில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதுடன், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதை கருத்தில் கொண்டும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், இக்கோவிலில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு மேற்கொண்டு, மீண்டும் கும்பாபி-ஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்-தது. இதற்காக, வர்ணீஸ்வரர் கோவிலில் கடந்தாண்டு செப்., 10ல் பாலாலயம் நடந்தது. ஆனால், பாலாலயம் நடந்து, ஓராண்-டுக்கு மேலாகியும், சீரமைப்பு பணி இன்னும் துவக்கப்பட-வில்லை. மேலும், இக்கோவிலில் முழுமையாக சீரமைப்பு மேற்-கொள்ள, 10 லட்சம் ரூபாய் என்பது போதுமானதாக இருக்காது. இக்கோவில் திருப்பணிக்கு நிதி அளிக்க, நன்கொடையாளர்கள் பலர் தயாராக உள்ளனர். எனவே, கோவிலில் முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கு-வதுடன், உடனடியாக திருப்பணிகளை விரைந்து துவங்க, அனு-மதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us