/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம்
/
வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 21, 2024 01:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி;தர்மபுரி கிழக்கு மாவட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் கடத்துாரிலுள்ள தனியார் மண்டபத்தில்
நடந்தது.
மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமை வகித்தார். மண்டல செயலாளர் தமிழ் அன்வர், மாநில நிர்வாகி நந்தன், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர், தகடூர் தமிழ்ச்செல்வன் பேசினார்.
கூட்டத்தில், திருச்சி மாநாடு வெற்றி அடைந்ததற்கு, அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, 33 தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிர்வாகிகள் சேட்டு, அதியமான், மாவட்ட பொருளாளர் லட்சுமணன், சக்தி, சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகர செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

