ADDED : நவ 17, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.சி. செயற்குழு கூட்டம்
அரூர், நவ. 17-
தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் மறுசீராய்வு மற்றும் மறுகட்டமைப்பு குறித்தும், கட்சியில் புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து, முன்னாள் மண்டல செயலாளர்கள் சேலம் நாவரசன், வேலுார், சுபாஷ்சந்திரபோஸ், ஆகியோர் விளக்கி பேசினர். இதில், செய்தி தொடர்பாளர் பாரதிராஜா மற்றும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.