ADDED : அக் 07, 2026 06:04 AM
அரூர்:அரூர்
தாலுகா அலுவலம் முன், அரூர் சட்டசபை தொகுதி, வி.சி., கட்சி சார்பில்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரூர் தொகுதி மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமை வகித்தார். மாநில
துணை செயலாளர் கனியமுதன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அரூர் அரசு
மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
நகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு வசதி போன்ற
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அதே போல், அரூர் ஊராட்சி
ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், குடிநீர், மயான
பாதை, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை. அவற்றை சரிசெய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச தொகுப்பு
வீடு ஆகியவற்றை வழங்கக்கோரி, மனு அளித்த தகுதி வாய்ந்த
நபர்களுக்கு அவற்றை வழங்க வேண்டும். பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார
நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாமல் முடியுள்ளது. அவற்றை மேம்படுத்தி
மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அரூர் மேற்கு நகர செயலாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.
