/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உழவர் சந்தைகளில் ரூ.52 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
/
உழவர் சந்தைகளில் ரூ.52 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
உழவர் சந்தைகளில் ரூ.52 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
உழவர் சந்தைகளில் ரூ.52 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
ADDED : ஜன 14, 2025 02:12 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, அரூர், பாலக்கோடு, காரிமங்-கலம், ஏ.ஜெட்டிஹள்ளி, பென்னாகரம் ஆகிய, 6 உழவர் சந்-தைகள் உள்ளன. நேற்று தர்மபுரி உழவர் சந்தையில், 145 விவசா-யிகள், 45,570 கிலோ காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை, 10,403 நுகர்வோர், மொத்தம், 24.80 லட்சம் ரூபாய்க்கு வாங்கிச் சென்றனர்.
அரூர், காரிமங்கலம், பாலக்கோடு, ஏ.ஜெட்டிஹள்ளி, பென்னா-கரம் ஆகிய உழவர் சந்தைகளில் பொங்கல் பண்டிகையை-யொட்டி, நேற்று காய்கறிகள் விற்பனை ஜோராக நடந்தது. மாவட்டத்திலுள்ள, 6 உழவர் சந்தைகளில்,
97,593 கிலோ காய்க-றிகள் மொத்தம், 52 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனையானது. இவற்றை, 23,116 நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.