தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குப்பை கொட்ட சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

குப்பை கொட்ட சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

குப்பை கொட்ட சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு


ADDED : பிப் 07, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் மொத்தமுள்ள, 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, தடங்கம் பஞ்.,ல் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது. இந்த கிடங்கில் இருந்து, 4 கோடி ரூபாய் மதிப்பில், ஒப்பந்தம் விடப்பட்டு குப்பை அகற்றும் பணி நடந்தது.

இதனால், சமீபகாலமாக தர்மபுரி நகராட்சியில் இருந்து குப்பை கொட்டப்படாமல், நகராட்சி எல்லை பகுதிக்குள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு தரம் பிரித்து சேகரிக்கப்பட்ட குப்பையை விவசாயத்திற்கு உரமாகவும், நெகிழி குப்பையை சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்ததால் மீண்டும், அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதால், குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் புகை மூட்டம் சூழ்வதால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று குப்பை சேகரித்துக் கொண்டு கொட்டுவதற்கு சென்ற வாகனங்களை அப்பகுதியினர் சிறை பிடித்தனர். நகராட்சி நிர்வாகத்தினர், இனிவரும் காலங்களில் இங்கு குப்பை கொட்ட மாட்டோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து வாகனங்களை விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us