தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வி.எச்.பி., தீர்மானம்

கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வி.எச்.பி., தீர்மானம்

கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வி.எச்.பி., தீர்மானம்


ADDED : மார் 02, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாநில பொதுசெயலாளர் சோமசுந்தரம், மாநில இளைஞர் அமைப்பு பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இதில், ஹிந்துக்கள் ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி என பிரிந்து கிடப்பதால், நம் ஒற்றுமை பலவீனமடைந்து அந்நிய சக்திகள் நம்மை ஆளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். எனவே, தமிழன் என்ற உணர்வோடு ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதேபோல், வரும் சட்டசபை தேர்தலில் ஹிந்துகள் மற்றும் ஹிந்து கோவில்களுக்கு யாரால் நன்மை ஏற்படும் என்பதை சிந்தித்து, அவர்களுக்கு ஓட்டுபோட வேண்டும் என பேசினர்.

தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையை உடனடியாக செயல்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதிய தொகை, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உர மானிய தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தர்மபுரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய புறநகர் பஸ் ஸ்டாண்டுக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் என, பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us