/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கழிவுநீர் கால்வாயை துாய்மை செய்த கிராம மக்கள்
/
கழிவுநீர் கால்வாயை துாய்மை செய்த கிராம மக்கள்
ADDED : மே 03, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி: தர்மபுரி அடுத்த, கொல்லஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாயில் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்படுகிறது. இதுகுறித்து, பஞ்., நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கழிவுநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடை கால்வாயை கிராம மக்களே துார்வாரினர்.