/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவிலை மீண்டும் கட்ட கிராம மக்கள் கோரிக்கை
/
கோவிலை மீண்டும் கட்ட கிராம மக்கள் கோரிக்கை
ADDED : செப் 30, 2025 02:16 AM
தர்மபுரி, பென்னாகரம் அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில் இடிக்கப்பட்ட கோவிலை, மீண்டும் கட்ட அனுமதி அளிக்க, கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள முள்ளுவாடி கிராமத்தில், 400 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில், 18 பட்டி கிராம மக்கள் வழிபட்ட மிகவும் பழமையான கொல்ல
மாரியம்மன் கோவில் இருந்தது. கடந்த, 6 வருடங்களுக்கு முன் சேதமடைந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடந்தது.
அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த இந்த கோவிலை, தனி நபர் ஒருவர் தன்னுடைய சுய நலனுக்காக, கோவிலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் பொய்யான தகவலை கூறி, நீதிமன்ற ஆணையைபெற்று, கோவிலை இடித்து விட்டார். இச்சம்பவம் எங்கள் பகுதி கிராம மக்களை மிகவும் பாதித்துள்ளது. எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட இடத்தில், மீண்டும் கொல்லமாரியம்மன் கோவில் கட்ட அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.