தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்


ADDED : ஆக 31, 2026 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறி-யலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொங்கவேம்புவில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்க-ளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து மேல்-நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்-படவில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வழங்கப்பட-வில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமத்-திற்கு ஆளாகி வந்தனர். இது குறித்து, அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திர-மடைந்த பெண்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர், காலிக்-குடங்களுடன், நேற்று காலை, 7:15 மணிக்கு, அரூர் - வாணியம்-பாடி தேசிய நெடுஞ்சாலையில் கொங்கவேம்பு பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலின்படி சம்பவ இடம் வந்த, அரூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மறியலில் ஈடு-பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பி.டி.ஓ.,விடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 8:15 மணிக்கு கலைந்து சென்றனர். மறியலால் சாலையின் இரு

புறமும் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்-தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us