குடிநீர் தேக்க தொட்டி திறக்க கிராம மக்கள் வேண்டுகோள்
குடிநீர் தேக்க தொட்டி திறக்க கிராம மக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 27, 2024 03:25 AM
தர்மபுரி: பல ஆண்டுகளாக, பயன்பாடின்றி உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்., சின்னதாய் அம்மாள் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க கடந்த, 10 ஆண்களுக்கு முன், இங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், 6,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் பஞ்., நிர்வாகம் சார்பில், தனித்தனியாக குடிநீர் குழாய் மட்டும் அமைக்கப்பட்டது. ஆனால், இவற்றில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
இதுகுறித்து, பஞ்., மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்ததில், 2017ல் இப்பகுதியில், 10,000 லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதிலும் குடிநீரை ஏற்றி முறையாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யவில்லை. இதில், முறையாக ஒகேனக்கல் குடிநீர் ஏற்றம் செய்து, இப்பகுதியிலுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
