தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதிமுறை மீறும் கிரஷர்களால் அவதிக்கு ஆளாகும் கிராம மக்கள்

விதிமுறை மீறும் கிரஷர்களால் அவதிக்கு ஆளாகும் கிராம மக்கள்

விதிமுறை மீறும் கிரஷர்களால் அவதிக்கு ஆளாகும் கிராம மக்கள்


ADDED : மார் 27, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:அரூர் சுற்று வட்டாரத்தில், 5க்கும் மேற்பட்ட தனியார் கிரஷர்கள் இயங்குகின்றன. இவை இரவு, பகல் பாராமல், விதிமுறைகளை மீறி செயல்படுவதால், அவதிக்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஜல்லி உடைப்பதற்காகவும், எம்.சாண்ட் மண் தயாரிக்கவும், 5க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஜல்லி உடைக்க பயன்படுத்தும் குவாரிகளில் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.

இரவு, பகல் முழுவதும் இயங்கும் கிரஷர்களிலிருந்து எம்.சாண்ட், ஜல்லி என, ஏராளமான டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்வதால், சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக, மண் சாலையாக மாறி புழுதி பறக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், அச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிரஷரில் இருந்து வெளியேறும் கல் துகள்கள் காற்றில் பறந்து, சுற்றியுள்ள விளைநிலங்களிலுள்ள பயிர்கள் மீது படிந்து, விவசாயம் பாதிக்கிறது. மேலும், குவாரிகளில் வைக்கப்படும் வெடி பொருட்களால், காற்று மாசுபடுவதுடன் அருகேயுள்ள வீடுகளின் சுவர்களில், விரிசல்கள் ஏற்பட்டு சேதமாகி, கிராம மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், விதிமுறைகளை மீறி செயல்படும், தனியார் கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us