/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் ; பெண்ணின் லேப்டாப் பறிமுதல்
/
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் ; பெண்ணின் லேப்டாப் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் ; பெண்ணின் லேப்டாப் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் ; பெண்ணின் லேப்டாப் பறிமுதல்
ADDED : மார் 22, 2024 07:07 AM
ஓசூர் : ஓசூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 36; இவர், தாலுகா அலுவலகம் அருகே, மக்கள் கணினி மையம் நடத்தி வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்கள் கணினி மையத்தில் செய்ய வேண்டிய பணியை, ஓசூர் சந்திரசூடேஸ்வரர் நகரிலுள்ள, தனியார் துணிக்கடையில் வைத்து நேற்று மேற்கொண்டார்.
அங்கு, விஸ்வகர்மா திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறும் வகையில், பொதுமக்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளார். இதற்காக, 30க்கும் மேற்பட்டோரிடம், 200 ரூபாய் வரை வசூல் செய்து, டோக்கன் வினியோகித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான சப் கலெக்டர் பிரியங்கா, அங்கு சென்று விசாரணை நடத்தி, உமா மகேஸ்வரியிடம் இருந்த லேப்டாப், பயோ மெட்ரிக் கருவி, கம்ப்யூட்டரை பறக்கும் படை உதவியுடன் பறிமுதல் செய்தார்.
ஓசூர் டவுன் போலீசார் உமாமகேஸ்வரி மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிந்தனர்.இது குறித்து, தேர்தல் பறக்கும் படையினர் கூறும் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மக்கள் கணினி மையங்கள் மூலமாக, அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், தனியார் துணிக்கடையில் வைத்து திட்டங்களுக்கு விண்ணப்பித்தது தவறு என்றனர்.

