/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தல் நடத்தை மீறல்; 3 வழக்குகள் பதிவு
/
தேர்தல் நடத்தை மீறல்; 3 வழக்குகள் பதிவு
ADDED : மார் 28, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : அரூர் அடுத்த டி.ஆண்டியூரை சேர்ந்தவர் மாரியப்பன், 34; இவரது வீட்டின் பாத்ரூம் சுவற்றில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி, அ.தி.மு.க.,வின் சின்னம் இரட்டை இலை வரையப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.ஐ., ராஜேந்திரன் அளித்த புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் மாரியப்பன் மீது வழக்கு பதிந்துள்ளனர். அதே போல், தென்கரைகோட்டையில் சான்பாஷா, 53, என்பவரது வீட்டில் அனுமதியின்றி இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதாக கோபிநாதம்பட்டி போலீசார், சான்பாஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எஸ்.பட்டியில் நுாலகத்தின் சுவற்றில் வி.சி., சின்னம் வரையப்பட்டு இருப்பது குறித்து, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.