/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவேகானந்தர் பிறந்தநாள் விழா கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
/
விவேகானந்தர் பிறந்தநாள் விழா கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
விவேகானந்தர் பிறந்தநாள் விழா கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
விவேகானந்தர் பிறந்தநாள் விழா கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
ADDED : ஜன 13, 2024 04:08 AM
தர்மபுரி: விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ரத்த தானம் முகாம் நடந்தது.
தனியார் கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள், தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். அரசு மருத்துவர் பிரியா மற்றும் கன்யா, கிருஷ்ணா பாரமெடிக்கல் கல்லுாரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை நேரு யுவகேந்திராவை சேர்ந்த ஹரிபிரசாத் செய்திருந்தார்.