/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் அருகே ஏரியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
/
அரூர் அருகே ஏரியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
அரூர் அருகே ஏரியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
அரூர் அருகே ஏரியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
ADDED : நவ 23, 2025 03:15 AM
அரூர், அரூர் அருகே, ஏரியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சங்கிலிவாடி ஏரியில், நேற்று காலை, 10:00 மணிக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் சிதறி கிடந்தது. அப்பகுதி மக்கள் தகவலின் படி, சம்பவ இடத்துக்கு வந்த அரூர் தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய்த்துறையினர் வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து தாசில்தார் பெருமாள் கூறுகையில், ''ஏரியில், 12 வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. அவற்றை எடுத்து வந்து விட்டோம். அரசியல் கட்சியினர் யாரோ, உறுப்பினர் சேர்க்கைக்காக, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், புது வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி விட்டனர். இதனால், அந்த வாக்காளர் அடையாள அட்டைகளை ஏரியில் வீசிச் சென்றுள்ளனர்,'' என்றார்.