/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு
ADDED : நவ 05, 2025 01:51 AM
தர்மபுரி :தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பாலக்கோடு, -பென்னாகரம்,- தர்மபுரி, -பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் -அரூர் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்த பணிகள், நவ., 4 நேற்று முதல் தொடங்கிவுள்ளது.
இதில், டிச்., 4 வரையிலான காலத்தில், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் இரட்டை பிரதியில், அவர்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து அலுவலர் குறைந்தது, 3 முறையேனும் வருகை செய்வார். வாக்காளர் அல்லது அப்போது, அவருடைய குடும்ப உறுப்பினர் (18 வயதுக்கு மேற்பட்டவர்) வசம் படிவத்தை வழங்குவார்.
வாக்காளர் அப்படிவத்தில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து, மீண்டும் அலுவலர்களிடம் வழங்க வேண்டும். ஆவணங்கள் ஏதும் இணைக்க வேண்டியதில்லை. பெறப்பட்ட படிங்கள் அனைத்தும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் புகார் இருந்தால், அதை தெரிவிக்க, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண், 1950, தர்மபுரி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர், 04342 -260927, பாலக்கோடு, -04348 -222045, பென்னாகரம், 04342- 255636, பாப்பிரெட்டிப்பட்டி, 04346- 246544, அரூர், 04346 -296565 ஆகிய எண்களில் புகார்கள் குறித்து, தொடர்பு கொண்டால் வாக்காளர் பதிவு அலுவலர் மூலம், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

