ADDED : ஏப் 05, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில், 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியம் குறித்து வருவாய்த்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரூரில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் கேன்கள் மற்றும் பாட்டில்களில், '100 சதவீதம் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்', 'வாக்குப்பதிவு செய்யத் தயாராவோம்', 'ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்' போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரூர் ஆர்.டி.ஓ.,வும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலை ஒட்டினார். இதில், அரூர் தாசில்தார் வள்ளி மற்றும் வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.
