/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு
/
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஆக 12, 2025 05:18 AM
ஒகேனக்கல்: தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை, 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி-யதால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. மேலும், தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையாலும், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடி
க்கு, 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகே-னக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்த-ருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் மெயின் பால்ஸில் குளித்தும், பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.