/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50,000 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 50,000 கன அடியாக சரிவு
ADDED : ஆக 21, 2025 01:54 AM
ஒகேனக்கல், கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணை பாதுகாப்பு கருதி, அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
நேற்று முன்தினம், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு, 1.16 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மழை குறைந்ததால், நேற்று காலை கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 20,888 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 34,562 கன அடி என மொத்தம், 55,450 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 7:00 மணிக்கு, 98,000 கன அடியாகவும், மாலை, 5:00 மணிக்கு, 50,000 கன அடியாகவும் சரிந்தது.இதனால், தண்ணீரில் மூழ்கியிருந்த ஐந்தருவி, ஐவர் பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து, 3வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.