/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அணை, ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: நீர்நிலைகளுக்கு செல்ல தடை
/
அணை, ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: நீர்நிலைகளுக்கு செல்ல தடை
அணை, ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: நீர்நிலைகளுக்கு செல்ல தடை
அணை, ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: நீர்நிலைகளுக்கு செல்ல தடை
ADDED : அக் 17, 2025 01:50 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலைப்பகுதியில் ஏற்காடு மலை அமைந்துள்ளது. இங்கு, மழை பெய்தால் வாணியாறு அணைக்கு நீர்வரத்து இருக்கும். அதன்படி கடந்து, சில தினங்களாக பெய்து வரும் மழையால் வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில் தற்போது, 40 அடியை எட்டி உள்ளது.
இதனாலும், சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழையாலும், நீர் ஆதாரம் பெறும் வெங்கடசமுத்திரம் ஏரி ஆலாபுரம், பறையப்பட்டி, தென்கரை கோட்டை உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டி ஏரிகள், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெங்கடசமுத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், ஏரி நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் ஏரியில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ, துணிகளை துவைக்கவோ செல்லக்கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏரிகளில் குளிக்க, மாடுகள் மேய்க்க தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் வெங்கடசமுத்திரம் கிராம பகுதியில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்து, ஆட்டோவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் ஆலாபுரம், பறையப்பட்டி, மெணசி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் ஒன்றிய அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.