நாகாவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
நாகாவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 17, 2026 07:12 AM

பென்னாகரம்; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஏர்ரப்பட்டியில் உள்ள நாகாவதி அணை-யிலிருந்து, 2025 - 26 ஆண்டு, 2ம் போக புன்செய் பயிர் சாகுபடிக்காக தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி முன்னிலையில், கலெக்டர் சதீஸ் நேற்று, தண்ணீர் திறந்து வைத்தார். நேற்று முதல் (16ம் தேதி) வரும் மே, 26ம் தேதி வரை, 100 நாட்க-ளுக்கு, 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை, தலைமை மதகின் வழியாக திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
நாகாவதி அணைக்கு தற்போதுள்ள நீர்வரத்தை கருத்தில் கொண்டும், பென்னாகரம் ஆயக்காடு ப-குதிகள் பயன்பெறும் வகையிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரகாசன-அள்ளி, சின்னம்பள்ளி, பெரும்பாலை உள்ளிட்ட மூன்று பஞ்சாயத்துக்களில் உள்ள, 1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள் நீர்வள அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, நீரை சிக்-கனமாக பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறும் நோக்குடன் செயல்பட கேட்டு கொள்ளப்பட்டது.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொரி-யாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
